search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கடற்படை"

    • சந்தேகத்திற்கிடமான படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.
    • எச்சரிக்கை விடுக்கும் முறையில் படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    தமிழக மீனவர் வீரவேல் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள பால்க் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை கப்பல் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. 21ந் தேதி அதிகாலையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கண்ட இந்திய கடற்படையினர் அந்த படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் படகு நிற்காததால், அதை நிறுத்தும் வகையில் எச்சரிக்கை முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த படகில் இருந்தவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த நபர், முதலுதவி சிகிச்சைக்கு பின், இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

    பின்னர் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது.
    • காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது.

    மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது. காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் திட்டத்தை திரும்ப மத்திய அரசு மறுத்து விட்டது. இதனிடையே அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் நடைமுறையை ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்திய கடற்படையில் சேருவதற்கு இதுவரை மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    நடுக்கடலில் புயலில் சிக்கி காயமடைந்து ஆம்ஸ்டர்டாமில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி இன்று பத்திரமாக விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டார். #GoldenGlobeRace2018 #IndianSailorRescued
    கொச்சி:

    கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார். 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது, புயல் காரணமாக அவரது படகை ராட்சத அலைகள் தாக்கியது.

    இதில், டோமியின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரால் மேற்கொண்டு படகை செலுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் அவர் தகவல் அனுப்பினார்.

    அதன்பேரில் மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பிரான்ஸ் மீன்பிடி கப்பல் ஒன்றின் உதவியால், அவர் கடந்த மாதம் 24-ம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டார். அதன் பின்னர் ஆம்ஸ்டர்டாம் தீவுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு டோமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆம்ஸ்டர்டாமில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமாக சத்புரா போர் கப்பல் மூலம் டோமி பத்திரமாக விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு உள்ள கடற்படை மருத்துவமனையில் மேற்கொண்டு டோமிக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும் என இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GoldenGlobeRace2018 #IndianSailorRescued 
    கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் போட்டியில் பங்கேற்ற இந்திய கடற்படை வீரர் மோசமான வானிலையால் நடுக்கடலில் தத்தளித்து வருவதால் அவரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #GoldenGlobeRace2018
    கொச்சி :

    கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயம் கடந்த ஜூலை 1–ந் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார்.

    ‘துரியா’ என்று பெயரிடப்பட்ட படகு மூலம் கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்த டோமி, திடீரென புயலில் சிக்கினார்.

    மோசமான வானிலையுடன் சுமார் 14 அடிக்கு அலைகள் எழுந்து டோமியின் படகை அலைக்கழித்தன. இதில் படகில் சிக்கிக்கொண்ட அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் படகை விட்டு அவரால் நகர முடியவில்லை. மேலும் 130 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியதால் அவரால் படகையும் செலுத்த முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் நேற்று அவர் தகவல் அனுப்பினார். அதன்பேரில் மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்றும் டோமியை மீட்க விரைந்துள்ளன. #GoldenGlobeRace2018 
    இந்திய கடற்படை தொடர்பான ரகசிய ஆவணங்களை விற்க முயன்ற வழக்கில் ஓய்வு பெற்ற கடற்படை தளபதிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி :

    கடற்படையின் ஓய்வு பெற்ற தளபதி சலாம் சிங் ரத்தோர் வீட்டில் இருந்து இந்திய கடற்படையின் பாதுகாப்பு தொடர்பான 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் கடந்த 2005-ம் ஆண்டு கைப்பற்றப்படது.

    இவற்றை பணத்திற்காக மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஓய்வு பெற்ற தளபதி சலாம் சிங் ரத்தோர் மற்றும் ஒய்வு பெற்ற கம்மேன்டர் ஜர்னைல் சிங் கல்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில்,  சலாம் சிங் ரத்தோரருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.அகர்வால் இன்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கம்மேன்டர் ஜர்னைல் சிங் கல்ரா விடுதலை செய்யப்பட்டார்.
    ×